
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர்,நடிகர் சங்கத்தலைவர் என்று பல முகங்களுடன் சமூகத்தில் கெத்தாக அலையும் நடிகர் நாசரின் இன்னொரு அதிர்ச்சிகரமான முகத்தைத் தோலுரித்துக்காட்டி ஒரு இரண்டு நிமிடக் காணொளி மூலம் பார்ப்பவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரது உடன்பிறந்த சகோதரர் ஜவஹர்.
ஜவஹர் பேசியுள்ள காணொளியின் சாராம்சம் இதுதான்...கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே செங்கல்பட்டில் கடுமையான வறுமையில் வசிக்கும் பெற்றோர்களை நாசர் கண்டுகொள்வதோ உதவி செய்வதோ இல்லை. அவர்களது பேரன்களைக் கூட ஒன்றிரண்டு முறை மட்டுமே கண்ணில் காட்டியுள்ளார்.
இது குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் கொடுக்க ஜவஹர் சென்றபோது அதை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.காரணம் நடிகர்களுக்கு மத்தியில் அவருக்கு உள்ள மிஸ்டர் நல்லவர் என்ற இமேஜ். மேடைகளில் நல்லது கெட்டது, குறிப்பாக சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது குறித்து இலக்கண இலக்கியத்தோடு உரையாற்றும் நாசர் தன்னைப் பெற்றெடுத்தவர்கள் விஷயத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பதை ஜவஹர் சொல்லும்போது கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.