
பக்கத்து வீட்டுப் பாப்பா போல அவ்வளவு பாந்தமாக இருக்கிறார் என்று பாராட்டி மகிழ்ந்தவர்கள் பேரதிர்ச்சி அடையும் விதமாக கிழிந்த டவுசர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை நந்திதா.
‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ’எதிர் நீச்சல்’,’நளனும் நந்தினியும்’,’முண்டாசுப்பட்டி’,’உப்புக்கருவாடு’ என்று தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வந்தவர் நந்திதா. இடையில் கொஞ்சம் நல்ல சம்பளத்துக்காக ஆந்திர சினிமாவுக்குத் தாவி ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’,’ப்ளஃப் மாஸ்டர்’ போன்ற படங்களில் சற்று தாராளமயமாக்களுக்கு தயாரானார்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று போனவருக்கு இரண்டு கரைகளுமே டல்லடிக்கவே, சமீப காலமாக நடிகைகள் விட்ட மார்க்கெட்டைப் பிடிக்க கையாளும் உத்தியான இன்ஸ்டாகிராமில் பரபரப்பான படங்களை வெளியிடுவது என்று தரை மட்டத்துக்கு இறங்கிவிட்டார் நந்திதா.
நேற்று தனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களில் நந்திதா வெளியிட்ட படங்களுக்கு அவரது ஃபாலோயர்களுக்கு மத்தியில் செம ரெஸ்பான்ஸ். ஆனால் பெரும்பாலான கமெண்டுகளில் ‘பாவம் இந்தப்புள்ள ரொம்ப கஷ்டத்துல இருக்குது போல. கிழியாத ஒரு நல்ல டவுசர் வாங்கிக்கொடுங்கய்யா’ என்றே சிபாரிசு செய்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.