'வர்மா’ படத்தை எங்களுக்கு போட்டுக்காட்டாமல் அழிக்கக்கூடாது...கொந்தளிக்கும் இயக்குநர்கள்...

By Muthurama LingamFirst Published Feb 9, 2019, 9:25 AM IST
Highlights


‘பேட்ட’,’விஸ்வாசம்’ பற்றிய செய்திகள் ஒருவழியாக ஒழிந்து தமிழ் சினிமாக்காரர்கள் காரசாரமாக விவாதிக்க  அடுத்து கையிலெடுத்திருக்கும் ஹாட் டாபிக் தயாரிப்பாளரால் கைவிடப்படவிருக்கும் பாலாவின் ‘வர்மா’.

‘பேட்ட’,’விஸ்வாசம்’ பற்றிய செய்திகள் ஒருவழியாக ஒழிந்து தமிழ் சினிமாக்காரர்கள் காரசாரமாக விவாதிக்க  அடுத்து கையிலெடுத்திருக்கும் ஹாட் டாபிக் தயாரிப்பாளரால் கைவிடப்படவிருக்கும் பாலாவின் ‘வர்மா’.

பூஜையோடு, கால்வாசியில், முக்கால்வாசியில், முற்றிலும் முடிந்து பிசினஸ் ஆகாததால் என்று எத்தனையோ விதங்களில் படங்கள் டிராப் ஆகியிருந்தாலும் ‘வர்மா’ டிராப் பண்ணப்பட்ட காரணம் இந்திய சினிமாவுக்கு புதுசு. படம் டிராப் என்று சொல்லப்படுவதை விட தயாரிப்பாளர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் ஸ்கிராப் அதாவது அழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர்களின் இந்த பேரதிர்ச்சியான முடிவுக்குப் பின்னால் அவர்களுக்கு 15 முதல் 18 கோடிவரை இழப்பு இருக்கிறது என்பதைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. காரணம் தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா ஒரே ஒரு பெரும்படத்தை வாங்கி விநியோகம் செய்தாலே சம்பாதித்து விடக்கூடிய பணம் அது. ஆனால் பாலாவுக்கு அப்படியல்ல. அவருக்கு அது வாழ்க்கைப் பிரச்சினை. குறிப்பாக அவரது சினிமா எதிர்காலத்தை சிதைத்துப்போடும் பேராபத்தை இது உண்டாக்கக் கூடும்.

ஆனாலும் தயாரிப்பாளரின் முடிவு குறித்து இதுவரை ஒருவரிடமும் மூச் விடவில்லை பாலா. இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஒருவரிடம் பேசியபோது,’பாலா சற்று அடாவடியான ஆள் என்று தெரிந்தேதான் அவரிடம் தயாரிப்பாளர்கள் போகிறார்கள். ‘வர்மா’ பட விவகாரத்தைப் பொறுத்தவரை படத்தின் தரம் குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. தயாரிப்பாளரின் ஈகோவை பாலா சற்று ஓவராகவே உரசிப்பார்த்திருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது. 

அதற்காக படத்தை குப்பயில் தூக்கிப் போடுவது என்கிற மரண தண்டனை லெவலுக்காக தண்டனையை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்குநர் பாரதிராஜா, சேரன், சீமான், ஆர்.கே.செல்வமணி என்று ஒவ்வொருவராகப் பேசிவருகிறோம். குறைந்த பட்சம் இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்காவது படத்தைப் போட்டுக்காட்டவேண்டும் என்று அந்தத் தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கப்போகிறோம்’ என்கிறார் அவர்.

click me!