
வெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி. இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் தொடரான 'நந்தினி' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.
இந்த சீரியலில், நாயகியாக நடித்திருந்தார் கர்நாடகாவை சேர்ந்த நித்யா ராம். இந்தி சீரியலில் வருவது போல, லோ ஹிப் சாரீ... லோ நெக் ப்ளௌஸ்... என கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்தார்.
தற்போது, நடிகை குஷ்பூ நடித்து வரும் 'லட்சுமி ஸ்டார்' சீரியலிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தற்போது தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்க தயாராகி விட்டார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவருக்கும், நித்யாவிற்கும், தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. தற்போது இந்த அழகிய தம்பதிகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பின், நித்யா சின்னத்திரைக்கு குட் பாய் சொல்லிவிட்டு, ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.