
சைத்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகம் கொடுத்த ஆரவ் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் ஒரு ஆணழகன் என நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில் ஆரவ், நேற்று இரவு காயத்ரி மற்றும் சினேகனுடன் பேசிக்கொண்டிருந்த போது, நமீதா தன்னை இதுவரை மூன்று முறை வாட்ச்மேன் என கூறி அசிங்கப்படுத்தியதோடு, ஐட்டம் பாய் என்று அழைப்பதாகவும் கூறி தன்னுடைய வருத்தத்தை தெரிகிறார்.
மேலும் இது வரை நான் அவரை ஒரு முறை கூட மரியாதை இல்லாமல் பேசியது இல்லை என்றும்... மேடம் என மரியாதையாக தான் அழைத்து வருவதாகவும் கூறுகிறார்.
நான் அவருக்கு மரியாதை கொடுக்க காரணம், அவருடைய வயதும், அவர் ஒரு சீனியர் நடிகை என்பதும் தான். என்னை பற்றி எதுவுமே தெரியாமல் ஏன் என்னை வாட்ச்மேன் என நமிதா கூறுகிறார்... நான் அவரை பெயர் சொல்லி அழைத்தாள் அது மரியாதையாக இருக்காது. அதே போல தன்னாலும் அவரை ஐட்டம் கேர்ள் என கூப்பிட முடியும். அவரிடம் சொல்லிவையுங்கள், இப்படி அழைப்பது தவறு என்று என எச்சரிக்கை விடுவது போல் கூறினார் ஆரவ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.