" ஹவுஸ் ஓனரை" இயக்க தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்...

 
Published : Jul 18, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
" ஹவுஸ் ஓனரை" இயக்க தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்...

சுருக்கம்

lakshmi ramakrishnan next movie house owner

அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைத்து நடிக்கும் படத்தை, அம்மணி படத்தை வித்தியாசமாக இயக்கி அனைத்து பெண்களுடைய பாராட்டை பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.

" ஹவுஸ் ஓனர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம்  ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக் கூறினார். 

மேலும்  "நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,அந்த  படத்தை அவளது திருமணத்துக்கு  பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது.அந்த படம் என்னை வெகுவாக  கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை.  

ஆனால் அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான , அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் படத்தின் மைய கருத்து. 

இதை  நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்ல போகிறேன். ஒளிப்பதிவாளர் ஜோமான் டி ஜான் ஒளிப்பதிவு செய்ய, அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் என்கிற திறமையான கலைஞர்கள் நாயகன் நாயகியாக நடிக்க இருக்கும் " ஹவுஸ் ஓனர்," விரைவில் துவங்க உள்ளது"  என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்