
இளையராஜாவின் பாடல்களை படமாக ஓவியர்கள் பலர் வரைந்த ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்த இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.
இந்த நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு கண்காட்சியை இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடத்த இருக்கிறார்.
இந்தக் கண்காட்சியில் சினிமா குறித்த பல அறிய தகவல்கள் இடம் பெறப்போவதாகவும், முக்கியமாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் தேர்வு செய்து, அந்தந்த பாடல்களுக்கேற்ற படங்களை சில ஓவியர்கள் வரைந்துள்ளார்களாம். அவை அனைத்துமே இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்த ஓவியங்களைப் பார்த்தாலே அது எந்த பாடலுக்குரியது என்பதைச் சொல்லி விட முடியும், அந்த அளவுக்கு தத்ரூபமாக வரைந்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.