
பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 'புலிமுருகன்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நமீதாவுக்கு மலையாளத்தில் நடிக்க ஒரு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தமிழில் இவரது நடிப்பில் விரைவில் 'பொட்டு' திரைப்படம் வெளியாகவுள்ளது.
மேலும் அண்மையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். ஆனால் இவரின் ஒரு சில செயல்கள் மக்களுக்குப் பிடிக்காததால் மக்களின் ஆதரவு இல்லாமல் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கும் மூத்த நடிகர் சரத் பாபுவிற்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து ஏற்கெனவே நடிகர் சரத்பாபு இது வதந்தி எனக் கூறியுள்ள நிலையில், தற்போது இது குறித்து நடிகை நமீதாவும் வாய் திறந்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், இந்தத் தகவலைக் கேட்டதுமே மிகவும் ஷாக்காக இருந்தது. தனக்கும் தன்னை விட மிகவும் வயதில் மூத்த நடிகருக்கும் திருமணம் என்று சொல்லப்படுவது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.
யார் இப்படிப் பட்ட தகவலை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை ஆனால் இது மிகவும் தவறு எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.