விவசாயிகள் பிரச்சனை... மத்திய அரசை விட மாட்டேன்... நக்மா ஆவேசம்...

 
Published : Apr 23, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
விவசாயிகள் பிரச்சனை... மத்திய அரசை விட மாட்டேன்... நக்மா ஆவேசம்...

சுருக்கம்

nakma talk about agricultures

தொடர்ந்து 40 நாட்களாக நல்ல சாப்பாடு, துணி மணிகள், குடிக்க தண்ணீர் என அடிப்படை வசதிகள் என அனைத்தையும் புறக்கணித்து விட்டு, விவசாயம் காக்க, பல லட்சம் விவசாயிகள் சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை.

தங்களது அவல  நிலைமையை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டுகாண்பித்தனர், ஆனால் இவர்களுடைய அவல குரலுக்கு மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை. 

இந்நிலையில் மதுரை வந்த நடிகை நக்மா செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வரை நான் விடமாட்டேன்  என ஆவேசமாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!