
கங்குலியுடனான காதல் முறிந்தது ஏன் என்பது தொடர்பாக நடிகை நக்மா விளக்கமளித்துள்ளார்.
2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி மற்றும் நடிகை நக்மா இடையேயான உறவுதான். இருவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்திகள் தான் அன்றைய காலக்கட்டத்தின் ஹாட் டாபிக்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலியும் தென்னிந்திய சினிமாவில் பெயர் பெற்ற நடிகையான நக்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இருவரும் வெளியே சுற்றித்திரிந்ததால்தான் இந்த தகவல் பரவியது.
ஆனால் நக்மாவுடனான காதலுக்கு முன்பே கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தது. கங்குலிக்கு 1997ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. எனினும் கங்குலிக்கும் நக்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
கங்குலியுடனான உறவு முறிந்ததன் காரணத்தை நக்மாவே கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள நக்மா, கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாத காலத்தில் கங்குலி பின்னடவை சந்தித்திருந்தார். அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் சரியாக ஆடாததற்கு என்னுடனான உறவு காரணமாக சொல்லப்பட்டது. எனவே இருவரின் பழக்கம் யாருடைய சொந்த வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடாது என முடிவெடுத்து பிரிந்தோம். மகிழ்ச்சியுடனே உறவை முறித்துக்கொண்டோம். எனினும் அவர் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன் என நக்மா தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.