
நடிகை தேவயானிக்கு ஜோடியாக 'தொட்டாசிணுங்கி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், நாகேந்திர பிரசாத். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என நிலையான இடத்தை பிடித்து, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பிரபுதேவாவின் சகோதரரும் ஆவர்.
நாகேந்திர பிரசாத்தால், நடிகனாக திரையுலகில் நிலைக்க முடியாமல் போனதால், நடனத்தில் கவனம் செலுத்தினார். பல படங்களில் நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
மேலும், நடிகர் விஜய் நடித்த 'கில்லி' , 'குஷி' ஆகிய படங்களில் அவருடைய நண்பராக நடித்துள்ளார். தற்போது 15 வருடங்களுக்கு பின், மீண்டும் நாகேந்திர பிரசாத் விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும், 64 ஆவது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இளைய தளபதி விஜய், தன்னுடைய நடிப்பு பயணத்தில் வெற்றிகரமாக 27 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், விஜய்யின் நண்பர்கள் சஞ்சீவ், நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருவது செம்ம மாஸ் தகவல் என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.