அட்லியின் ‘ப்ரியா பாப்பா’ பொசுங்க வைக்கிறார்! என் கவுண்ட்டர் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு நயன்!: கோலிவுட் பரபர

Published : Dec 08, 2019, 06:18 PM IST
அட்லியின் ‘ப்ரியா பாப்பா’ பொசுங்க வைக்கிறார்! என் கவுண்ட்டர் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு நயன்!: கோலிவுட் பரபர

சுருக்கம்

அட்லீ தன் சினிமா ஹீரோயின்களை விட தனது நிஜ ஹீரோயினான மனைவி பிரியாவை ஏகத்துக்கும் பல வித ஆங்கிளில் போட்டோக்கள் எடுத்து தள்ளி கொண்டாடுகிறார். டிசம்பர் 6-ம் தேதி அவரது பிறந்தநாளன்று ‘மை பாப்பா’ என்று உருகி உருகி கொண்டாடி, அப்லோடிய ட்விட்டார் கோலிவுட்டில் பலரைப் பொசுங்க வைத்துள்ளதாம்.

* அஜித், விஜய், சூர்யா என்று இளம் தலைமுறை மாஸ் ஹீரோக்களுடன் நடித்துவிட்ட காஜல் அகர்வால், ரஜினி மற்றும் கமலை மிஸ் பண்ணிட்டோமே! என்று ஏங்கினார். ஆனால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும், ‘வாவ் கமலுக்கு ஹீரோயினாயிட்டேன்’ என்றார். ஆனால் உண்மையில் கமலின் ஜோடியாகும் வாய்ப்பு, ப்ரியா பவானி சங்கருக்கு போயுள்ளது. மேக் - அப் போட்டு பார்த்ததில் காஜலை விட, பவானிக்குதான் பழைய சுகன்யாவின் முகவெட்டு பக்காவாய் பொருந்தியுள்ளது. ஆக காஜலுக்கு வேறு வேடமாம். 

* பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியின் போதே மாரிராஜாவுடன் இணைந்து தனுஷ் ஒரு படம் பண்ணுவாதாக இருந்தது. சற்றே லேட்டான நிலையில், இப்போது அவர்களின் படம் துவங்குகிறது. திருநெல்வேலியை கதை களமாக கொண்டு துவங்கும் இந்த படத்தின் பெயர் ‘கர்ணன்’. இதுவும் தலித் மக்களின் துயர கதை சொல்லும் படமாகவே இருக்குமென தெரிகிறது.

* தெலுங்கானா திஷா விவகாரத்தில் நடந்த என்கவுன்ட்டருக்கு ஏகத்துக்கும் ஆதரவான வார்த்தைகளில் அறிக்கை வெளியிட்டிருந்தார் நயன் தாரா. ஆனால் இதற்கு பதிலடியாக அவரை சிலர் போட்டுத் தாக்கியுள்ளனர். ”சிம்பு, பிரபுதேவா! என்று இருவருடன் காதலாகி பின் இப்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நீங்கள் எப்படி இதையெல்லாம் பற்றி பேசலாம்? பிரபுதேவாவின் மனைவி ரமலத், அவரை பிரிந்தது யாரால்? திருமணமாகி, சில குழந்தைகளுக்கு தாயாக இருந்த ஒரு பெண்ணின் வாழ்வை கெடுத்ததும் ஒரு வகையான  பலாத்காரம்தான்.” என்று சிலர் பொங்கி தள்ளியுள்ளனர் இணைய தளத்தில். 

* அட்லீ தன் சினிமா ஹீரோயின்களை விட தனது நிஜ ஹீரோயினான மனைவி பிரியாவை ஏகத்துக்கும் பல வித ஆங்கிளில் போட்டோக்கள் எடுத்து தள்ளி கொண்டாடுகிறார். டிசம்பர் 6-ம் தேதி அவரது பிறந்தநாளன்று ‘மை பாப்பா’ என்று உருகி உருகி கொண்டாடி, அப்லோடிய ட்விட்டார் கோலிவுட்டில் பலரைப் பொசுங்க வைத்துள்ளதாம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?