
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்கள். பிரபு ஹீரோவாக ஹிட்டடிக்க, ராம்குமார் தயாரிப்பு நிறுவனம் மூலம் பட்டையைக் கிளப்பி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்றார்.
இதையும் படிங்க: மணப்பெண்ணாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்... பட்டுப்புடவை, நகையில் பளபளக்கும் போட்டோஸ்...!
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு ராம்குமார் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து, நடிகர் திலகம் ஆசியுடனும் இறையருளுடனும் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக மேற்கொண்ட தேர்தல் பரப்புரைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்திலும் பரப்புரைகளிலும் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள் நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரொனா தொற்று, மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவத் துவங்கியுள்ளது. மக்கள், அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஜூலை 21ம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.