'அரண்மனை 3 ' மோஷன் போஸ்டரில்... வித்தியாசமான கெட்டப்பில் இடம்பெற்ற மறைந்த நடிகர் விவேக்..!

By manimegalai aFirst Published Apr 22, 2021, 3:52 PM IST
Highlights

இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3 ' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இதில் நடிகரின் விவேக், மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார். 
 

இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3 ' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இதில் நடிகரின் விவேக், மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார். 

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் இணைந்து நடித்த பவர் ஃபுல் ஆக்ஷன் படமாக இயக்கப்பட்ட 'ஆக்ஷன்' திரைப்படம் வெளியானது. படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி இருந்ததால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதைதொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி வழக்கம் போல ஹாரர் கதைக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது அரண்மனை சீஸிஸ் 3 படத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில், நடிகை ஹன்சிகா, வினய், சுந்தர்.சி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். அரண்மனை 2 ஆம் பாகத்தில் நடிகர் சித்தார்த், திரிஷா, ஹன்ஷிகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க நடிக்கிறார். ராஷி கண்ணா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் , விறுவறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென சுந்தர் சி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது அவர் தனிமைப்படுத்தும் காலத்தில் உள்ளார் என்பதும், விரைவில் அவர் மீண்டும் ’அரண்மனை 3’ படத்தின் தொழில்நுட்ப பணியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை சற்றுமுன் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் ஆர்யா, சுந்தர்.சி, யோகி பாபு, விவேக், ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளார். அந்த போஸ்டர் இதோ... 

Here’s the motion poster from

An Production 💪💪 pic.twitter.com/UMHEFyJrGX

— Arya (@arya_offl)

click me!