நடிகர் சங்க தேர்தல் நடைபெற கூடாது...! விஷால் பேச்சால் வெடிக்கும் பிரச்சனை..!

Published : Aug 19, 2018, 05:52 PM ISTUpdated : Sep 09, 2018, 07:37 PM IST
நடிகர் சங்க தேர்தல் நடைபெற கூடாது...! விஷால் பேச்சால் வெடிக்கும் பிரச்சனை..!

சுருக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சென்னையில் நடைபெற இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சென்னையில் நடைபெற இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன்  சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுக்குழு  கூட்டத்தில்  பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த,  துணை தலைவர்  கருணாஸ், 2017-18க்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட வரவு-செலவு  கணக்குகளை வாசித்து  ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார்கள் என்று ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதே போல் நடிகர் சங்க தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளதால், பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொது குழுவில் தேர்தல் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலில், பாண்டவர் அணி என்று கூறி நடிகர் நாசர் தலைமையில் களமிறங்கிய விஷால் அணியை சேர்ந்தவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். 

இன்னும் இரண்டு மாதங்களில் இவர்களுடைய பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தலை ஆறு மாதம் ஒத்தி வைக்க வேண்டும் என விஷால் அணியை சேர்ந்தவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். இதற்க்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது "தற்போது நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முழுவதுமாக முடிவடைய ஆறு மாத காலம் தேவைப்படுவதால்' . கட்டிடம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் இவர்களுடைய வேண்டுகோளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், எதிர் தரப்பை சேர்ந்த சிலர் இவர்களுடைய கருத்து பற்றி கூறுகையில்... 'நடிகர் சங்க தேர்தல் எப்போதும் போல் நடைபெற வேண்டும்'. இவர்களுக்காக ஆறு மாதம் ஒத்தி வைக்க முடியாது. புதியவர்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டால் இந்த பணியை அவர்கள் மேற்கொள்வார்கள் என கூறியுள்ளனர். 

இருப்பினும் விஷால் அணியை சேர்ந்தவர்கள், விடாபிடியாக இருப்பதால் பெரிய பிரச்சனைய வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது நடைபெற்று வரும், 65 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர்கள் கார்த்தி, பொன்வண்ணன், முக்கிய நிர்வாகிகள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டுள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!