இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்வது யார்..? வெளியானது தகவல்..!

Published : Aug 19, 2018, 04:16 PM ISTUpdated : Sep 09, 2018, 07:52 PM IST
இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்வது யார்..? வெளியானது தகவல்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வாரம் ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். இது தான் நிகழ்சியின் விதி. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வாரம் ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். இது தான் நிகழ்சியின் விதி. 

இந்நிலையில் இந்த வாரம் ஏவிக்சன் பட்டியலில் 5 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் நடிகை ரித்விகா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்றைய தினம் அறிவித்தார். 

தற்போது இந்த பட்டியலில் வைஷ்ணவி, சென்ராயன், ஜனனி, டேனியல் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் அனைவரிடமும் வீட்டை விட்டு செல்வீர்களா என்று பற்றி கேள்வி எழுப்புகிறார். இதற்கு அனைவரும் போக வேண்டாம், இங்கு இருந்து வெற்றி பெற வேண்டும் என்பது போன்று பதில் கூறுகிறார்கள். 

ஆனால் கண்டிப்பாக இன்று ஒருவர் வீட்டை விட்டு செல்வார் என்பதற்கான எலிமினேஷன் கார்டை காட்டுகிறார் கமல். 

மேலும் இன்று ஒளிப்பரப்பாக உள்ள நிகழ்ச்சியை நேரில் பார்த்த ரசிகர்கள் சிலர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது ஆர்.ஜே.வைஷ்ணவி தான் என்று கூறியுள்ளனர். 

ஏற்கனவே ஒரு முறை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வைஷ்ணவிக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டும், அதனை அவர் சரியாக பயன்படுதிக்கொள்ளாமல், மற்றவர்கள் பற்றி பின்னால் பேசி வந்ததால் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என கூறியுள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!
நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!