ஜில்லா, தெறி படங்களில் நான் நடிச்ச சீன் எல்லாம் கட் ஆகிடுச்சு – சிரிச்சிக்கிட்டே சொல்கிறார் யோகி பாபு…

 
Published : Jun 24, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஜில்லா, தெறி படங்களில் நான் நடிச்ச சீன் எல்லாம் கட் ஆகிடுச்சு – சிரிச்சிக்கிட்டே சொல்கிறார் யோகி பாபு…

சுருக்கம்

my scenes are deleted in Jilla Theri films - says Yogi Babu

ஜில்லா, தெறி ஆகிய படங்களில் சின்னதா ஒரு ரோல் பண்ணியிருப்பேன். ஆனால், படத்தோட எடிட்டிங்கில் நான் நடிச்ச சீன் எல்லாம் கட் ஆகிடுச்சு என்று மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கும் யோகி பாபு சிரிச்சிக்கிட்டே தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய 61-வது படமான மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

மேலும், கோவை சரளா, யோகி பாபு, சத்யராஜ், சத்யன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று விஜய்யின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு யோகி பாபுவிடம் படத்தைப் பற்றி மனம் திறந்தார்:

“எனக்கு சத்தியமா மெர்சல் படத்தோட கதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. விஜய் நடித்த ஜில்லா, தெறி ஆகிய படங்களில் சின்னதா ஒரு ரோல் பண்ணியிருப்பேன். ஆனால், படத்தோட எடிட்டிங்கில் நான் நடிச்ச சீன் எல்லாம் கட் ஆகிடுச்சு.

தற்போது விஜய் நடிக்கும் இப்படத்தில் நடிக்கிறீங்களானு கேட்டதற்கு படத்தி கதையைக் கூட கேட்காமல் நடித்தேன். தற்போதுதான் படத்தோட டைட்டில் மெர்சல் என்று எனக்கு தெரியும்.

மூன்று கெட்டப்புக்கு ஏற்றமாதிரி படம் நல்லாயிருக்கு. இப்படத்தில் மூன்றாவது கெட்டப்பில் வரும் விஜய் – சமந்தாவுடன்தான் என்னுடைய ரோல் டிராவல் ஆகும். இதில், என்னோட ரோலின் பெயர் நோலா. ஆனால், பேரைக் கேட்டாலே பலர் சிரிப்பாங்க” என்றுத் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!