
என் எதிர்கால திட்டமே விவசாயம் பண்ணுவதுதான் .... நெகிழ்ந்து சொன்ன நடிகர் சிவ கார்த்திகேயன் !!
சினிமாவில் நடிப்பதில் தற்போது நான் பிசியாக இருந்தாலும் பிற்காலத்தில் எனது கடைசி புகலிடமாக விவசாயம்தான் இருக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிற்காலத்தில் கட்டாயமாக விவசாயத் தொழிலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சனைகள். இயற்கை விவசாயம் போன்றவை குறித்து நடிகர் ஆரி கடந்த பல ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்
இந்நிலையில் நடிகர் ஆரி, விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சிவ கார்த்திகேயன், இயற்கை விவசாயத்தில் தனக்கும் மிகுந்த ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். என்னுடைய மகளுக்கு இதுவரை நான் சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தது இல்லை என குறிப்பிட்டார்.
ஃபாஸ்ட் புட் உணவு விளம்பரங்களில் நடிக்க தனக்கு அழைப்பு வருதாகவும், மகளுக்கே அதை நான் வாங்கித் தராதபோது நான் எப்படி அந்த மாதிரி உணவுகளை சாப்பிடுங்கள் என்று விளம்பரத்தில் நடிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது என்றும், தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன் என்றும் கூறினார்.
தற்போது நான் சினிமாவில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் , பிற்காலத்தில் பெரிய அளவில் விவசாயம் செய்யும் திட்டம் உள்ளது என்றும், எனது கடைசி புகலிடமாக விவசாயம்தான் இருக்கும் என்றும் சிவ கார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.