'விஸ்வாசம்' பாடலை பாடிய பார்வையற்ற இளைஞருக்கு 24 மணிநேரத்தில் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர்! குவியும் வாழ்த்து!

Published : Sep 22, 2019, 01:16 PM ISTUpdated : Sep 22, 2019, 01:19 PM IST
'விஸ்வாசம்' பாடலை பாடிய பார்வையற்ற இளைஞருக்கு 24 மணிநேரத்தில் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர்! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

நேற்றைய தினம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி என்பவர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடிய வீடியோவை அஜித்தின் ரசிகர் ஒருவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவி, ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையே வெளிச்சமாக்கி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி பிச்சை எடுத்த போது,  அதனை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி தற்போது ரனுவிற்கு பாட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி என்பவர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடிய வீடியோவை அஜித்தின் ரசிகர் ஒருவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவியது.

இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திலேயே 4 லட்ச பார்வையாளர்களை பார்க்கப்பட்டு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டது.  மேலும் பலர், அருமையான குரல் வளம் கொண்ட இந்த பார்வையற்ற இளைஞருக்கு திரையுலகில் பாட வாய்ப்பு கிடைக்குமா?  என கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

இந்த வீடியோ 'விஸ்வாசம்' படத்தின் இசையமைப்பாளர் இமான் கண்ணில் பட,  அவர் உடனடியாக இந்த வீடியோவை பதிவிட்ட அஜித் ரசிகரை தொடர்பு கொண்டு, திருமூர்த்தியின் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் விரைவில் அவருக்கு தன்னுடைய இசையமைப்பில் உருவாகும் படம் ஒன்றில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளாராம். இந்த தகவலை இமான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து. அவருக்கு கடவுள் துணை இருப்பர் என பதிவிட்டுள்ளார். 

24 மணி நேரத்தில், பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்ப்பு கொடுத்த இம்மனுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வருகிறார்கள். 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jailer 2 Release Date : அலப்பறை கிளப்ப வரும் டைகர் முத்துவேல் பாண்டியன்... ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!