’காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அஜீத் சாரின் அந்த வார்த்தைகள்’...நெகிழும் முன்னணி இசையமைப்பாளர்...

Published : Mar 31, 2019, 01:21 PM IST
’காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அஜீத் சாரின் அந்த வார்த்தைகள்’...நெகிழும் முன்னணி இசையமைப்பாளர்...

சுருக்கம்

நடிகர் அஜீத் தன் படத்துக்கு ஒரு இயக்குநரை தேர்வு செய்த பிறகு மற்ற டெக்னீஷியன்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அச்செய்தியைப் பொய்யாக்கும் வகையில் ‘அடுத்த படத்துல நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று ஒரு இசையமைப்பாளருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் அஜீத் தன் படத்துக்கு ஒரு இயக்குநரை தேர்வு செய்த பிறகு மற்ற டெக்னீஷியன்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அச்செய்தியைப் பொய்யாக்கும் வகையில் ‘அடுத்த படத்துல நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று ஒரு இசையமைப்பாளருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

'விஸ்வரூபம்', 'தூங்காவனம்', 'மாயவன்', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக  வலம் வருகிறார் ஜிப்ரான். தற்போது, கமல் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு கமலுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு இதே ஜிப்ரான் தான் இசையமைப்பாளர். ஆனால் அதே வினோத் தற்போது அஜித்தை  இயக்கி வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

’அடடே பெரிய ஹீரோ படம் கிடைச்ச உடனே வினோத் நம்மள கைவிட்டுட்டாரே என்று எண்ணாத ஜிப்ரான் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்புக்குச் சென்று இயக்குநர் விநோத்தைச் சந்தித்துள்ளார். அப்படியே படப்பிடிப்புக்கு  இடையே அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்த சந்திப்பு குறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு உண்மையான அஜீத் ரசிகனின் மனநிலையில் இருக்கிறேன். அஜீத் சாரை பற்றி  மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை காட்டிலும் மேலானவராக இருக்கிறார். பல விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால் ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  ‘'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்பதே அது. நன்றிகள்... என்று பகிர்ந்துள்ளார் ஜிப்ரான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?