
மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் பிஜி பால், இவர் கடந்த 2002 ஆம் வருடம் கேரளாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரும் படகியுமான சாந்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று திடீர் என மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருடைய இறுதிச்சடங்கு இன்று 12 மணியளவில் கேரளாவில் நடக்க உள்ளது.
36 வயதாகும் சாந்தி மற்றும் இசையமைப்பாளர் பிஜி பால் இருவருக்கும் தேவா மற்றும் தயா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் சாந்தியின் 'சகலதேவ துதி' என்று இவர் ஆடி வெளிவந்த நாட்டியம்,வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது. இளம் வயதில் மரணமடைந்த இவரின் உடலுக்கு கேரள திரையுலகத்தை சேர்ந்த பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.