D Imman : கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் ..குவியும் வாழ்த்துக்கள்

By Kanmani PFirst Published Oct 31, 2022, 8:21 PM IST
Highlights

தனது twitter பக்கத்தில் இசைத்துறையில் சிறப்பாக பங்காற்றுவதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பாலிவுட் என தென்னிந்திய மொழிகளில் இசை அமைப்பாளராக ஜொலித்து வருகிறார் டி.இம்மான்.  தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை இவர் கைவசம் வைத்துள்ளார். 2001 ஆம் ஆண்டு காதலே சுவாசம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர், தமிழன், சேனா, விசில், கிரி, சின்னா, பிப்ரவரி 14, அன்பே வா, மதராசி உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு  இசையமைத்துள்ளார்.

கடந்தாண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் டி இமானின் குரலும் இசையும் பட்டையை கிளப்பி இருந்தது. இந்த ஆண்டு எதற்கும் துணிந்தான், யுத்தம் சத்தம், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை, கேப்டன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.  இதற்கிடையே சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் மனைவியான மோனிகாவை விவகாரத்தை செய்துவிட்ட டி இமான், சமீபத்தில் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...Nikki Galrani : திருமணத்திற்கு பிறகு அதிக போட்டோ சூட் நடத்தும் நிக்கி கல்ராணி...நியூ போட்டோஸ் இதோ

டி. இமானுக்கு ஏற்கனவே இரட்டை பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், ஒரு பெண் குழந்தையுடன் எமிலி என்பவரை திருமணம் செய்து இருந்தார். இது குறித்து அவரது மனைவி கடுமையாக சாடியும் இருந்தார். இந்நிலையில், தற்போது டி இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அவர் தனது twitter பக்கத்தில் இசைத்துறையில் சிறப்பாக பங்காற்றுவதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 

Glad to receive the Honorary Doctorate from the International Anti Corruption and Human Rights Council (Recognised by Government of India) in the field of Musical Arts!
Honoured by this gesture!
Thanks for all the love and wishes!
Praise God!
-D.Imman pic.twitter.com/5OjsohUZPi

— D.IMMAN (@immancomposer)

 

click me!