சினிமாவின் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி... இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய தயாரிப்பாளர் அதிரடி கைது!

Published : Jul 21, 2021, 12:58 PM IST
சினிமாவின் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி... இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய தயாரிப்பாளர் அதிரடி கைது!

சுருக்கம்

தயாரிப்பாளர் ஒருவர், இளம் பெண்களின் மனதில் சினிமா ஆசையை விதைத்து அவர்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்த நிலையில், மும்பை போலீசார் தயாரிப்பாளர் உட்பட 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

தயாரிப்பாளர் ஒருவர், இளம் பெண்களின் மனதில் சினிமா ஆசையை விதைத்து அவர்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்த நிலையில், மும்பை போலீசார் தயாரிப்பாளர் உட்பட 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர், தொழிலதிபர் ராஜ் குந்த்ரா... ஆபாச படம் தயாரித்து அதனை செயலில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது சில நடிகைகளும், அடுத்தடுத்து புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மற்றொரு தயாரிப்பாளர் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள மிராரோடு, சாந்தி நகர் பகுதியில் சில பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து  போலீசார் இதனை உறுதி செய்வதற்காக, போலியான வாடிக்கையாளரை அனுப்பி கண்காணிக்க செய்த போது தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி என்பவர் இரண்டு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் அதிரடி ரைடில் ஈடுபட்ட போலீசார் தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு துணையாக விபச்சார தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய ஒரு பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இளம் பெண்களை போலீசார் விசாரித்த போது, தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி தான் தயாரிக்க இருக்கும் படங்களில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, இவர்களை விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது. மேலும் இந்த இரண்டு பெண்களையும் போலீசார் காப்பகங்களில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?
காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!