பிரபல பாடகியின் 15 வயது பிஞ்சு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..! 5 பேர் அதிரடி கைது..!

Published : Jul 21, 2021, 11:14 AM IST
பிரபல பாடகியின் 15 வயது பிஞ்சு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..! 5 பேர் அதிரடி கைது..!

சுருக்கம்

கடந்த ஏப்ரல் மாதம், பிரபல பின்னணி பாடகி ஒருவர் தன்னுடைய 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து, பாதிரியார் உட்பட உறவினர்கள் நான்கு பேர் மீது புகார் கொடுத்தார். பின்னர் பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் தலைமறைவான நிலையில் தற்போது 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஹைதராபாத்தில் வசித்து வரும் பிரபல பின்னணி பாடகி ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தங்கையின் வீட்டில் வைத்து படிக்க வைத்து வந்துள்ளார். எனவே கடந்த சில வருடங்களாக, அவரது மகளும் சித்தி வீட்டில் தான் இருந்துள்ளார். கொரோனா தலைதூக்கியதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதல் தன்னுடைய மகளை ஹைதராபாத்துக்கே அழைத்து சென்றார் அந்த பாடகி.

பின்னர் சிறுமிக்கு திடீர் என உடல் நல பிரச்சனைகள் வர துவங்கியது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, பாதிரியார், சித்தப்பா உள்ளிட்ட 5 பேர் இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவரவே அதிர்ந்து போன பின்னணி பாடகி, மீண்டும் சென்னை வந்து, சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில், தங்கை, தங்கை கணவர், அவரது தம்பி, பாதிரியார் உள்ளிட்ட 5 பேர் மீது புகார் கொடுத்தார்.

புகார் கொடுக்கப்பட்டவர்கள் தலைமறைவான நிலையில், போலீசார் 5 போரையும் தேடி வந்தனர். இந்நிலையில் பாதிரியார், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?