
மும்பையை சேர்ந்த மாடலிங் நடிகர் ஒருவர் குடி போதையில் தாயை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, லோகந்த்வாலா பகுதியில் லக்சயா சிங் என்ற விளம்பர நடிகரும், அவரது தாய் சுனிதாவும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தனர்.
லக்சயா சிங், அதிக மது போதைக்கு அடிமையாக இருந்ததால், தாய் - மகன் இவருக்கும் இடையே அடிக்கடி பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இதோ போல் ஒரு தகராறு வெடித்துள்ளது. அப்போது... தாய் சுனிதாவை, நடிகர் லக்சயா சிங் வேகமாக இழுத்து குளியலறையில் தள்ளியுள்ளார். அப்போது வாஸ்பேஷினில் தலை மோதி, சுனிதாவிற்கு ரத்த அதிகமாக வெளியேறியுள்ளது. பின் மயங்கிய நிலையில் இருந்த தாயை லக்சயா கவனிக்காமல் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு சென்றதால் அவர் குளியல் அறையிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
மீண்டும் காலையில் வீட்டிற்கு வந்த லக்சயா, குளியலறை கதவை திறந்தபோது, தாய் சுனிதா சடலமாக கிடந்ததை கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
போலீசார் அங்கு வந்த விசாரித்த போது..." யாரோ மந்திரம் செய்து தாயை கொன்றுவிட்டதாக லக்சயா கூறியுள்ளார்". இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லக்சயா தான் அவரது தாய் சுனிதாவை கொன்றது உறுதியானது. இதையடுத்து பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.