அடடே தேவதர்ஷியின் மகளா இவர்?’ பின்னிப்பெடலெடுக்குறாங்களே...

By sathish k  |  First Published Oct 7, 2018, 3:45 PM IST

'96'  படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கியூட்டான குட்டி தேவதை கிடைத்திருக்கிறார் என்று  இந்த நியாத்தி கடாம்பியைப் பற்றி சொன்னால் மிகையில்லை.


'96'  படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கியூட்டான குட்டி தேவதை கிடைத்திருக்கிறார் என்று  இந்த நியாத்தி கடாம்பியைப் பற்றி சொன்னால் மிகையில்லை. படத்தின் ஃப்ளாஷ்பேக் பகுதியில் சின்ன வயசு தேவதர்ஷினி சுபாஷினியாய் வரும் இவர் உண்மையில் தேவதர்ஷினியின் மகளேதான்.

Tap to resize

Latest Videos

‘அம்மாதான் என்னை இயக்குநர் பிரேமிடம் சிபாரிசு செய்து அந்த கேரக்டரில் நடிக்கவைத்தார். படப்பிடிப்பு என்றவுடன் மிகவும் டென்சனாக இருந்தேன். ஆனால் படப்பிடிப்பு குழுவினர் என்னிடம் பழகிய வித்தில் அனைவரையும் என் சொந்தங்கள் போலவே உணர்ந்தேன்’ என்கிற நியாத்தி ப்ளஸ் ஒன் மாணவி. படம் வெளியான முதல் நாள் உடன் படிக்கும் சக மாணவிகள் நியாத்தியை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டார்களாம்.

சுமார் கால் மணிநேரமே வருகிற குட்டிப் பாத்திரம் என்றாலும் ஆச்சர்யமான எக்ஸ்பிரசன்களில் மனதை அள்ளிவிடுகிற நியாத்தியைப் பாராட்ட ‘தாய் எட்டடி குட்டி பதினாறு அடி’ என்கிற பழமொழியை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு புதுசாக ஏதாவது யோசித்தே ஆகவேண்டும்.

ஆக, தேவதர்ஷிணி-சேத்தன் தம்பதிகளின் வீட்டில் தமிழ்சினிமாவுக்கு அடுத்த ஒரு கதாநாயகி தயாராகி வருகிறார்..!

click me!