
துப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்,. அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. துப்பாக்கி, கத்தியை போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகப்பெரிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழகத்தில் இவருக்கு ரசிகர் ரசிகைகள் எக்கச்சக்கம். இதேபோல் கேரளாவிலும் கணிசமான எண்ணிக்கையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். இதனால் திரையரங்கு விநியோகஸ்த உரிமையில் தமிழில் வேறு எந்த படமும் செய்யாத சாதனையை கேரளாவில் சர்கார் படைத்துள்ளது. இதேபோல் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கானாவிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் தொடங்கியது என்பதே அந்த அறிவிப்பு ஆகும். சர்காருக்கான தெலுங்கு பாடல்களை ரீ ரெக்கார்டிங் செய்யும் பணிகளை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கினார்.
சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமாலி ஆகியோர் சர்காருக்கான தெலுங்கு பாடல்களை எழுதியுள்ளனர். முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் சர்கார் தீபாவளி சமயத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.