மறந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் இன்று மாலை உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகனுமான வாசு விக்ரம் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான 'பாலைவனத்தில் பட்டாம்பூச்சி' என்கிற படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். பின்னர் நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சு விரட்டு, சிவாஜி, எங்கள் ஆசான் உள்ளிட்ட சுமார் 50-திற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடியனாகவும் நடித்துள்ளார்.
நடிப்பு என்பது, வாசு விக்ரமின் ரத்தத்தில் ஊறியிருப்பதாலோ என்னவோ... இவர் நடிப்பில், மறைந்த நடிகர்களான எம்.ஆர்.ராதா மற்றும் இவரின் தந்தை எம்.ஆர். வாசுவின் நடிப்பை பார்க்க முடியும். வெள்ளித்திரை மட்டும் இன்றி, சின்னத்திரையிலும்... இவரின் சித்தியான ராதிகா நடித்த சித்தி, செல்வி, செல்லமே, உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
undefined
ஹீரோயின் போல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மகள் தியா! குட்டையான கியூட் உடையில் கலக்கும் போட்டோஸ் வைரல்!
இந்நிலையில் இன்று மாலை 7 மணியளவில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 83. இவரின் உடல், கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவிலுள்ள வாசுவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள் கிழமை மாலை 2 மணியாளத்தில் ஏவி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
லலிதாம்பாளின் மறைவு குறித்து அறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதில் "நடிகர் திரு. MRR வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான திருமதி. லலிதாம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.