
கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வசந்த குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்திருந்தார். இதையடுத்து கட்சி தொண்டர்கள் அவர் பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் அப்பா நல்ல உடல் நிலை நன்றாக இருப்பதாக பிரபல நடிகரும், தொழிலதிபருமான விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். அப்பாவுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அதுவரை சளி, காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் என எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை எனக்கூறிய விஜய் வசந்த், அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்ததால் தற்போது ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.