ஒரே கேள்வி... அதிர்ச்சியான தயாரிப்பாளர் 'மேகி' பட நாயகி வெளியிட்ட உண்மை..!

Published : Nov 27, 2019, 01:50 PM IST
ஒரே கேள்வி... அதிர்ச்சியான தயாரிப்பாளர் 'மேகி' பட நாயகி வெளியிட்ட உண்மை..!

சுருக்கம்

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று படங்களாவது வெளியாகி வருகிறது. இப்படி வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறுகிறதா, என்றால் அது சந்தேகம்தான். நல்ல கதை, சிறந்த நடிப்பு, போன்ற அம்சங்கள் சிறிய படங்களில் இடம் பெற்றிருந்தாலும் பெரிய படங்களின் வருகையால், அப்படங்கள் வந்த வழியும், போகும் வழியும் தெரியாமல் காணாமல் போகின்றது.  

மேலும் பல படங்கள் பூஜை போடப்பட்டு, முடிக்கப்படுவது இல்லை. ஒரு சில காரணங்களால் பாதியிலேயே கை விட படுகின்றது.  இந்நிலையில், புதிதாக திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்குமே,  நாம் நடிக்கும் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உருவாகி, விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் 'மேகி'. இந்த படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், முதல் முதலாக தயாரிப்பாளரை சந்தித்தது இவர் கேட்ட கேள்வி அவரையே அதிர வைத்ததாக தற்போது கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது சமூக வலைத்தளத்தில், டப்மேஷ செய்த வீடியோக்கள் மூலம் தான் தனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், தன்னை தயாரிப்பாளர் சந்தித்து பேசும் போது, அவரிடம் இந்தப் படத்தை முடித்து வெளியிடுவீர்களா என கேட்டேன், அவர் அதை கேட்டு  அதிர்ச்சி அடைந்தார்.

பின் கண்டிப்பாக இப்படம் வெளியாகும் என்கிற நம்பிக்கை கொடுத்த பின்பே, இந்த படத்தில் நடிக்க துவங்கியதாகவும் தெரிவித்துள்ள நிம்மி, இப்போதும் நான் அவரிடம் கேட்ட கேள்வியை நினைத்தால் நினைத்தால் சிரிப்பு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது விரைவில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார் நிம்மி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒரு கிராமம் முழுக்க திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் ஆண்கள்! தண்ணி பிரச்சனைக்காக இப்படி ஒரு முடிவா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி