
டாட்டு போட வேற இடமே கிடைக்கலையா என பிக்பாஸ் புகழ் சாக்ஷியை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் போட்டு தாக்கி வருகின்றனர். இதுவரையில் தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பிக்பாஸ் சீசன்களைவிட மூன்றாவது பிக் பாஸ் சீசனே அதிபரபரப்புகளுடன் களைகட்டியது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கவின், சாக்ஷி, லாஸ்லியா என்ற மூவரின் முக்கோணக் காதலே என்பது அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக பிக் பாஸ் சீசன் 3 இல் முக்கியமானவர் சாக்ஷி, அந்தளவிற்கு போட்டியில் பிறர் சண்டைக்கு போகாமலும் , வந்தை சண்டையை விடாமலும் தன் இயல்பான திறனை காட்டி பெயரெடுத்தவர் அவர். இவர் விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகே தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானார் . பாதியில் போட்டியை விட்டு வெளியேறினாலும், தனது பரம எதிரிகளாக கவின் மற்றும் லாஸ்லியாவை குறிவைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சாக்ஷி, தன்னுடைய கருத்து மற்றும் செயல்களால் கோவக்கார சாக்ஷி என நெட்டிசன்கள் அவருக்கு பட்டப்பெயர் கொடுத்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் மீது எழும் விமர்சனங்களையும் சாக்ஷி கருத்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது அதில் தன் தொடையழகை காட்டியபடி தன் தொடையில் குத்தி உள்ள டாட்டூவை அவர் காட்டுவதே ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது. தன்னுடைய தொடையை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அப்படி அவர் படம் போட்டு உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.