
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தற்போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் விஷால் பேசுகையில்... இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது.
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது.
ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி.
தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்துவருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். மெஹ்ரீனுடன் நான் “ தம்ப்ஸ் அப் “ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.அவரும் வெற்றி பெற வேண்டும்... என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.