ஆவுன்னா கட்டி புடிச்சு முத்தம் கொடுக்கும் மோகன் வைத்யா..! ஸ்நேகனை ஓரங்கட்டிய புதிய சோதனை..!

Published : Jul 17, 2019, 04:45 PM IST
ஆவுன்னா  கட்டி புடிச்சு முத்தம் கொடுக்கும் மோகன் வைத்யா..! ஸ்நேகனை ஓரங்கட்டிய புதிய சோதனை..!

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் ஒருவரான மோகன் வைத்யா தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் ஒருவரான மோகன் வைத்யா தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். முதல் இரண்டு வாரங்களில் பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகவும், வயதில் பெரியவர் என்பதற்கு ஏற்ப மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறியும் அவ்வப்போது சில பல கசப்பான நிகழ்வுகளை சக போட்டியாளர்களிடமும் பகிர்ந்து வந்திருந்தார். 

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. காரணம் எதற்கெடுத்தாலும் மோகன் வைத்யா அழுவதும் கோபித்துக்கொள்வதும், அவ்வாறு சோகமாக இருக்கும்போது அருகில் இருப்பவர்களை கட்டி பிடித்துக் கொள்வதும்..அதில் குறிப்பாக சாக்ஷி அபிராமி என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கு உதாரணமாக... இரண்டாம் வார இறுதியில் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே மோகன் வைத்யா பெயர் காண்பிக்கப்பட்டபோது, அவர் உணர்ச்சிவசப்பட்டு வெளியே செல்ல போகிறோம் என எண்ணி அனைவரையும் ஒவ்வொருவராக கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் சேரன், சாண்டி,சாக்ஷி என அனைவரையும் கட்டிப்பிடித்து  பின்னர் லாஸ்லியா விடம் சென்று, கன்னத்தை பிடித்து நெற்றியில் முத்தமிடுகிறார். அப்போது கமல் கூட.."போதும் போதும் ரொம்ப முத்தம் கொடுத்துட்டு" என சொல்லியிருந்தார். 

இவ்வாறாக பிக்பாஸ் வீட்டில் செல்கிறது இந்த பல்வேறு முத்தக்காட்சி. பிக்பாஸ் சீசன் ஒன்றில் சினேகன் பற்றி கட்டிப்பிடி வைத்தியம் பேசப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் ஓரங்கட்டி விட்டு ஸ்நேகனை மிஞ்சி உள்ளார் மோகன் வைத்யா 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!