
மத்திய அரசின் புராஜக்ட் ஒன்றுக்கு அனுமதி அளிப்பதற்காக இரண்டு பாலிவுட் நடிகைகளை தனக்கு அனுப்பும்படி ஒரு அமைச்சர் கேட்டுக்கொண்ட தகவல் தன்னிடம் வந்து சேர்ந்திருப்பதாகவும் அதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னவிதமான தண்டனைகள் இருக்கின்றன என்பது குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெடிகுண்டு தகவல் ஒன்றை பற்றவைத்துள்ளார் பிஜேபி தலைவர்களுல் ஒருவரான சுப்ரமணிய சுவாமி.
தொடர்ந்து சர்ச்சையான செய்திகளை பகிர்ந்துவரும் சுப்ரமணிய நேற்றைய தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ள நிலையில் அச்செய்திக்குக் கீழே ஆயிரக்கணக்கில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அதில் சிலர் சட்ட நுணுக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க இன்னும் சிலர் அந்த அமைச்சரின் பெயரைக் குறிப்பிடுங்கள்...அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தானே என்று கேட்டபடி க்ளுவும் கொடுத்து வருகிறார்கள்.
இன்னும் சில கிளுகிளு பார்ட்டிகளோ மும்பை நடிகைகளின் பெயர்களைத்தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட, சென்னைவாசி ஒருவர் ‘கோடம்பாக்கத்துல பாலிவுட்டை விட வெயிட்டான ஹீரோயின்கள் இருக்காங்களே ஏன் அந்த அமைச்சர் மும்பைப் பொண்ணுங்களுக்கு அலையிறார்? என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.