அசால்ட் சாதனை படைத்த அந்த காலத்து தல எம்ஜிஆர்... பாக்ஸ் ஆபீசில் பண்ணிய மரணமாஸ் சம்பவம்!!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை  அப்போதே இருந்துள்ளது அதற்க்கு சாட்சி அந்தக்காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை  அப்போதே இருந்துள்ளது அதற்கு சாட்சி அந்த காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

Latest Videos

எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த நாடோடி மன்னன்  தமிழ் சினிமாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம். இது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பல நடைமுறை யதார்த்தங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் மக்கள் மத்தியில் பேசவைத்த  படம்.

பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 22ஆம் நாள் வெளியான நாடோடி மன்னன், படம் ரிலீசான தியேட்டர் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. படமம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ் சினிமா ஹிஸ்ட்ரியில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இதுவரை இன்னொரு படம் இடம் பெறவில்லை என்பதே உண்மை. 

அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த படமாக பார்க்கப்பட்டது  இந்த படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். 

தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்'  வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள்  தமிழக திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: தலைவா நீங்க நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. "மன்னாதி மன்னன்" அப்போது ரசிகர்கள்  வார்த்தைகள் பொய்க்கவில்லை. நாடோடி மன்னன், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து  எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார்கள்.  1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது  சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது. 

நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில்  தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ரஜினி, அஜித் படங்களை போலவே 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம்! 

தமிழக சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக என பல சுவாரஷ்ய சம்பவங்கள் இடம்பெற்றது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு.  

நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'  "என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'  ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனம் பயங்கர க்ளாப்ஸ் அள்ளும். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை அசால்ட்டாக எடுத்திருந்தார் தல எம்ஜிஆர்.

கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பரோ... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது. இப்படி கண்முன்னே பார்ப்பதைப் போல பயங்கர மாஸாக இருக்கும்.

டபுள் எம்.ஜி.ஆர்,  பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள், மாஸ் ஃபைட் சீன்கள் எம்ஜி ஆர் வைத்திருக்கும் வாளை விட கூர்மையான வசனங்கள் என கொட்டிக்கிடந்த பிரமாண்டங்களால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து செல்லும் திருப்தியடையாத ரசிகனின் முணுமுணுப்பே படத்தின் மாஸ் வெற்றியை கொடுத்தது.

இந்த பிரமாண்ட வெற்றியை அறிவிக்கும் போஸ்டரில் "போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளிவிவரங்கள் இரண்டே வாரங்களில் 15 தியேட்டர்களில் 10,35,665  பேர் கண்டுகளித்தனர். மொத்தம் வசூலான தொகை ரூபார் 6,295,79.88 "ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்கிறார்கள் நல்லவர்களால் பாராட்டப்படும் வெற்றிச் சித்திரம்" என போஸ்டர் வெளியிட்டிருந்தார்கள். 

இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன சனிக்கிழமையை தியேட்டரில் ஈ ஓட்டுவார்கள், மூணு நாள் படம் ஓடினாள் வெற்றி விழா, தங்க செயின், காரு, பைக் கிப்ட்டாக கொடுக்கும் இந்த நிலையில்,அப்போதெல்லாம் ரிசர்வேஷன் சிஸ்டம் கிடையாது,முன் கூட்டியே டிக்கெட் வாங்குவதோ இயலாத காரியம், ஏகப்பட்ட தடவை டிக்கெட்
கிடைக்காமல் திரும்பி, சுமார் ஒன்றரை மாதம், இரண்டு மாதங்கள் கழித்து பார்த்ததாக தாத்தாக்கள் சொல்வார்கள். 

அந்த காலத்தில் வசூலில் தாறுமாறு பண்ண நாடோடி மன்னனை, அப்போதைய பிரமாண்டத்தை மிஸ் பண்ண இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு,  60 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிட்டனர்.  எதிர்பார்த்ததைப் போலவே  ரீ-ரிலீசிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்கள் வரை வெற்றிபெற்று சாதனை படைத்தது.  நாடோடி மன்னன்' படத்தில், நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார்.

click me!