
எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் , மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் பொன்வண்ணன், பாக்ய ராஜ் , ரமேஷ் கண்ணா, விக்ரமன், செல்வமணி, பாரதி ராஜா போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இதில் எம்.ஜி.ஆர் 100 ஆண்டு விழா இந்த வருடம் வருவதையொட்டி 17.1.2017 முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 24.2.2017 வரை ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு, அனைவரும் போயஸ் கார்டன் சென்று, தற்போதைய பொது செயலாளர் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்
.
இந்த சந்திப்பின் பொது, எம்.ஜி.ஆர் ரின் 100 வது பிறந்த நாள் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் ஒரு மாதம் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்த பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.