MeToo-வில் மணிரத்னத்தை உள்ளே இழுக்கும் லீனா மணிமேகலை!

Published : Oct 24, 2018, 10:23 AM ISTUpdated : Oct 24, 2018, 10:24 AM IST
MeToo-வில் மணிரத்னத்தை உள்ளே இழுக்கும் லீனா மணிமேகலை!

சுருக்கம்

இயக்குநர் மணிரத்னத்தையும் சுசிகணேசன் விவகாரத்தில் வம்பிழுக்கத்துவங்கியிருக்கிறார் லீனா.  MeToo' விவகாரத்தில் என்னிடம் மாட்டிய பிறகு, தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்று பல இடங்களில் சுசிகணேசன் அடையாளப்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறார்.

பாவம் ஒரு ரூபாய்தானே மான நஷ்ட ஈடாகக் கேட்கிறார் என்று சுசிகணேசனை விடுவதாயில்லை லீனா மணிமேகலை. அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளரும் என்பதால் மீடியாவும் அவரை சப்போர்ட் பண்ணுவதாக நினைத்துக்கொண்டு அவர்களையும் விடாமல் வம்பிழுக்கும் லீனா, ’சுசி கணேசனின் கைக்கூலிகள் போல அவன் உமிழ்வதையெல்லாம் வெளியிடும் சில தமிழ் ஊடகங்களே, நான் பேசுவது உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் தான். என்னை அவமானப்படுத்தி, என் மேல் வழக்குகள் போட்டு, பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி என்னை வாயடைக்க முடியாது’ என்று எகிறி அடித்துக்கொண்டே இருக்கிறார்.

இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னத்தையும் சுசிகணேசன் விவகாரத்தில் வம்பிழுக்கத்துவங்கியிருக்கிறார் லீனா.  MeToo' விவகாரத்தில் என்னிடம் மாட்டிய பிறகு, தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்று பல இடங்களில் சுசிகணேசன் அடையாளப்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறார்.

 

இதில் உடனே தலையிட்டு மணிரத்னம் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையெனில் அவர் தன்னிடம் பல படங்களில் உதவியாளராக வேலை பார்த்த சுசிகணேசனை காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற கரும்புள்ளி அவர் மீது விழுந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார் லீனா. என்னடா இது மணிரத்னத்துக்கு வந்த சோதனை?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!