தெலுங்கு ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்!

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
தெலுங்கு ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்!

சுருக்கம்

mersal thelugu release update

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளி தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த திரைப்படம் மெர்சல். 

வெளியாவதற்கு முன்பே விலங்கு நல வாரியம் மற்றும் சென்சார் சான்றிதழ் என பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம். வெளியான பிறகும் பாஜகவினரால்  பணமதிப்பிழப்பு  மற்றும் ஜி எஸ் டி பற்றிய வசனங்களுக்கு எதிர்ப்புகளை சந்தித்தது.

ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளில் இருந்தும் மீண்டு தற்போது வரை பல திரையரங்கங்களில் 'மெர்சல்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இன்று ஆந்திராவில் தெலுங்கில் மெர்சல் திரைப்பம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து வந்த தகவலின் படி தெலுங்கிலும் மெர்சல் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாகவும். முக்கியமாக விஜய் பேசும் ஜி.எஸ்.டி வசனத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!