அட ..இது தான் "மெர்சல் படம்"..! சும்மா மெர்சல் மெர்சல்ன்னு....

 
Published : Oct 16, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
அட ..இது தான் "மெர்சல் படம்"..! சும்மா  மெர்சல்  மெர்சல்ன்னு....

சுருக்கம்

mersal film story delivered in short and sweet

தீபாவளிக்கு  வெளியாக  உள்ள மெர்சல் படத்தை  பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள்  பயங்கர  மெர்சலாகி  உள்ளனர். ஊரெல்லாம்  கட் அவுட்  என்ன... விஜய் பற்றி விமர்சனங்கள்  என்ன...

அடடே... சொல்லி மாளாது போல....இதெல்லாம்  சரி..தீபாவளிக்கு  என்னமோ  மெர்சல் படம் மட்டுமே திரைக்கு வர மாதிரியும் , மற்ற படங்களை எல்லாம்  ஓரங்கட்டி விட்டது மெர்சல்....

காரணம் " மெர்சல் " பெயருக்கு .....நான் தான் சொந்தம் ....நீ தான்  சொந்தம்னு சொந்தம் கொண்டாட  தொடங்கி .... எப்படியோ  ஒரு வழியா... தீபாவளிக்கு  எல்லோரையும்  மெர்சலாக்கி விட வேண்டும்  என   முடிவு செய்து விட்டனர்.

பல  தடைகளை  மீறி தற்போது  நாளை  மறுதினம் வெளியாக உள்ள   மெர்சல் படத்தில், அப்படி என்னதான்  கதையோ   என்ன..? என பலரும்  மெர்சலாகி உள்ளனர்.

இது போன்று மெர்சலானவர்களுக்கு தான்  இந்த  கதை  சுருக்கமே .....யாரு எந்த  கதாபாத்திரத்தில், என்ன ரோல் பன்ன போறாங்க பார்க்கலாமா......

கதாபாத்திறங்கள்

விஜய் - வெற்றி & மாறன் - ஹீரோ
எஸ்ஜே.சூர்யா - டேனியல் - வில்லன்
சத்யராஜ் - ரத்னவேல் - போலீஸ் அதிகாரி
வடிவேலு - வடிவு - காமெடி
சத்யன் - மணியா - போலீஸ்
ராஜேந்திரன் - மினிஸ்டர் - கெஸ்ட் ரோல்
யோகிபாபு - நொள்ள - தாரா ப்ரெண்ட்
காஜல் - பல்லவி - கதாநாயகி 1
சமந்தா - தாரா - கதாநாயகி 2
நித்யா மேனன் - நித்யா - கதாநாயகி 3
கோவை சரளா - சரளா - ஹீரோவின் தாய்

மெர்சல்  படம்  இவ்வளவு  தான்  கதை சுருக்கம்....சும்மா  மெர்சல் மேர்சல்னு ...

வெற்றி தன் அண்ணன் டாக்டர் மாறனின் பெயரை கொண்டு மருத்துவதுறையில் உள்ள சிலரை கடத்தி கொலை செய்கிறான், வெற்றியை மாறனாக நினைத்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி ரத்னவேல், வெற்றியிடம் கொலைக்கான காரணங்களை கேட்கிறார்,

வெற்றி தன் தந்தை வெற்றிமாறனுக்கு கடந்தகாலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை கூறுகிறான், வெற்றிமாறன் தளபதியாக தன் சொந்த ஊரில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார், ஏழை மக்களுக்காக மருத்துவமனை கட்டிகொடுத்து அதில் இலவச மருத்துவம் செய்ய டேனியேலை நியமிக்கிறார்.

வெற்றிமாறனின் இரண்டாவது குழந்தையின் பிரசவத்தில் பணத்திற்காக தவறான முறையில் சிகிட்சை அளிக்க வெற்றிமாறனின் மனைவி இறக்கிறாள், இதை அறிந்து கேட்ட வெற்றிமாறனை டேனியேல் அடித்து கொல்கிறான். சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தலையில் அடிபட்டு சிறுவயது ஞாபகங்கள் மறக்கிறது, பின்னர் மாறனுக்கு வெற்றி மூலம் உண்மைகள் தெரிய வருகிறது, இருவரும் சேர்ந்து டேனியேலை கொல்கின்றனர்.

இறுதியில் வெற்றி சிறைக்கு செல்கிறான், மாறன் இந்திய மருத்துவ கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறான். அவ்வளவு தான்  படம்  முடிஞ்சது.....வேற நியூஸ் பாருங்க.....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!