மெர்லின்  திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரிய மனு...!

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 07:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
மெர்லின்  திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரிய மனு...!

சுருக்கம்

merlin movie issue high court order

மெர்லின்  திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க  படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி  23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த பேய்  படத்தில்  வரக்கூடிய ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வருபவர் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று  சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த்து. மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், இந்த படத்தில் உள்ள காட்சிகள் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக சென்சார் போர்ட்க்கு அளித்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்க வில்லை. எனவே பெண்களுக்கு எதிரான வசனங்கள் வரும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு  உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 

இதனையடுத்து நீதிபதி தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அன்று ரஜினி, கமல் வந்தப்போ காத்துவாங்கிய மலேசியா ஸ்டேடியம்... இன்று ஹவுஸ்ஃபுல் ஆக்கி மாஸ் காட்டிய விஜய்!
பிக் பாஸ் வச்சாரு பாரு ட்விஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?