சேரனை சீண்டி சண்டை இழுத்த மீரா! இப்படி செஞ்சா நீங்க ஓவியா ஆகிடுவீங்களா?

Published : Jul 10, 2019, 11:24 AM ISTUpdated : Jul 10, 2019, 11:49 AM IST
சேரனை சீண்டி சண்டை இழுத்த மீரா! இப்படி செஞ்சா நீங்க ஓவியா ஆகிடுவீங்களா?

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற உள்ளது என்பதை முன்னரே அறிவிக்கும் விதமாக, அதன் ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற உள்ளது என்பதை முன்னரே அறிவிக்கும் விதமாக, அதன் ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது.

அந்த வகையில், சற்று முன் வெளியாகியுள்ள ப்ரோமோவில் வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டை பற்றிய காட்சி தான் ஒளிபரப்பாகி உள்ளது.

இதுவரை, வனிதா, மது, அபி, என பலருடன் சண்டை வாங்கிய மீரா இப்போது சேரனிடம் சண்டை போடும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, திடீர் என மீரா... "நான் அங்கு வரும் போது, நீங்க ஒரு வார்த்தை சொன்னீர்கள். இதற்கு சேரன் என்ன என்று கேட்க, நீ வேலை செய்யாமல் எஸ்கேப் ஆவுறதே உன்னோட வேலையா இருக்கு என்பது போல் பேசுனீங்க என கேட்கிறார்.

இதற்கு சேரன் அமைதியாக சாப்பிட்டு கொண்டே, அது உனக்கு ஹட் ஆகி இருந்தால் சாரி என கூறுகிறார். அதே போல் "இனி இந்த வேலைக்கு உன்னை வா என நான் அழைக்க மாட்டேன். அதுக்கு ஒற்றுழைத்தால் நீ இந்த டீமில் இருக்கலாம் என கூறுகிறார். இதற்கு மீரா நான் ஒத்துழைப்பு தராத பெண், வேலைசெய்யாத பெண் என தன்னை வெளிப்படுத்த முயற்சிக்காதீர்கள் என கூறுகிறார்.

இதற்கு சேரன் காலையில் நானா பிரச்னையை ஸ்டார்ட் செய்தேன். என கோவமாக பேச மீரா அந்த இடத்தில் இருந்து, சேரனின் வார்த்தைக்கு மரியாதை தராமல் சென்றார். அபிராமி அவரை அழைக்க முயற்சி செய்தும் மீரா வெளியேறினார். இவர் இப்படி செய்வது ஓவியாவை உள்வாங்கி கொண்டு அவரை போலவே இருக்க முயல்வதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Khushbhu Daughter Wedding : கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்..!
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்