
பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்று வெளியேற்றப்பட்டவர்களில் அதிக சர்ச்சைக்கு ஆளானவர் நடிகை மீரா மிதுன். இதனையடுத்து, தற்போது பிக்பாஸ் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே முகேனை வளைத்து போட அவர் பேசும் ஆடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 யில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் இறுதி சுற்றில் உள்ளனர். தர்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் நேற்று மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, ரேஷ்மா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். உள்ளே வந்த மீரா மிதுன் சாண்டிக்கும், முகேனுக்கும் புது டிரஸ் வாங்கி கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
"
இந்நிலையில் தற்போது மீரா மிதுன் பேசும் ஆடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த ஆடியோவில் மீரா மிதுன் ஒருவரிடம் பேசும் போது, நானும் முகேனும் நெருக்கமாக இருக்க சீன்ல எடுத்து வீடியோ ரெடி பண்ணி வைரலாக்குங்க உங்களுக்கு பேசியபடி அமௌன்ட் செட்டில் செய்கிறேன் என டீல் பேசுகிறார். அவர் பேசும் இந்த ஆடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.