சூப்பர் ஸ்டாருடன் ஒரே படத்தில் இணையும் 'மீனா' 'திரிஷா'..!

 
Published : Oct 22, 2017, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
சூப்பர் ஸ்டாருடன் ஒரே படத்தில் இணையும் 'மீனா' 'திரிஷா'..!

சுருக்கம்

meena and trisha join in super star movie

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் இந்த வாரம் 'வில்லன்' என்கிற படம்  வெளியாக உள்ளது.  

தற்போது மோகன்லால் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகி வரும் ‘ஒடியன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் புதிதாக நடிக்க உள்ள திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பல படங்களில் இவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை மீனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே போல் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில், நிவின்பாலியுடன் ‘ஹேஜுட்’ படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமான திரிஷாவும்  நடிக்க இருக்கிறாராம். 

மலையாளத்தில் திரிஷாவுக்கு இது 2-வது படம் என்றாலும். முதல்முறையாக மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் அதே போல் திரிஷா கோலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி  நடிகை பட்டியலில் இடம் பிடித்தாலும் கோலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மலையாளத்தில் இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!