
மி டு புகாரில் சிக்கியவர்களில் 7பேர் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் கச்சேரிகளில் கலந்துகொள்ள சென்னை மியூசிக் அகாடமி தடை விதித்துள்ளது.
பரபரப்பு கிளப்பிவரும் ‘மி டு’ புகார்களில் பிரபல சங்கீத வித்வான்களும் தப்பவில்லை. சின்மயி துவக்கி வைக்க, சில கர்நாடக சங்கீத பாடகிகளும் வித்வான்களால் நேரும் செக்ஸ் தொல்லைகளை வலைதளங்களில் பரப்ப ஆரம்பித்தனர். இதில் அதிகம் அடிபட்டவர்களான என். ரவிகிரண், ஓ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி. ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்யநாதன் ஆகியோர் பெயர்களை வெளியிட்ட சென்னை மியூசிக் அகாடமி இவர்களில் யாருமே இந்த டிசம்பர் மாதக் கச்சேரிகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இதை இன்று அறிவித்த மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, ‘மி டு’ இயக்கத்தை சென்னை மியூசிக் அகாடமி வரவேற்கிறது. இந்த புனித கலையின் பெயரைச்சொல்லிக் கொண்டு பாவகாரியங்களில் ஈடுபடுபவர்களைப் பார்த்து கண்ணை மூடிக்கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை’ என்று கறாராக அறிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.