
தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் தீயாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் மயில்சாமி வெள்ளம், கொரோனா பாதிப்பு போன்ற சமயங்களில் சென்னை மக்களுக்கு சத்தமில்லாமல் பல உதவிகளை செய்தவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் உள்ளது. எனவே வர உள்ள சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளதாக அறிவித்தார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை போட்டியாளராக போட்டியிட உள்ள நடிகர் மயில் சாமி, கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பதை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றில் பேசுகையில், ’எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை நான் விசில் அடித்திருக்கின்றேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னமே கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.