சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்... கோலிவுட்டே காத்திருந்த படத்தில் கலக்கப்போவது இந்த இரண்டு நடிகர்களா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 14, 2020, 07:43 PM IST
சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்... கோலிவுட்டே காத்திருந்த படத்தில் கலக்கப்போவது இந்த இரண்டு நடிகர்களா?

சுருக்கம்

முன்னாள் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட இந்த கதையில், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.  ஜூன் 15ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பிய அன்றைய தினமே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இதையும் படிங்க: பிகினியில் மாளவிகா மோகனன்... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த “மாஸ்டர்” நாயகி...!

மலையாளத்தில் வெற்றி பெற்ற  “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. தற்போது அந்த படத்தில் சிம்புவும், பார்த்திபனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

முன்னாள் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட இந்த கதையில், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவே இயக்குநர் சச்சி தன்னை அய்யப்பனும் கோஷியும் படத்தின் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டார் என பார்த்திபனே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சச்சியும் இறப்பதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில்,  அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் பார்த்திபன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி