கொரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் ... ஐசியூ-வில் தீவிர சிகிச்சை...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 14, 2020, 5:09 PM IST
Highlights

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

தனது வசீகர குரலால் ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி.பி. விரைவில் பூரண குணமடைய வேண்டுமென திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்  தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் , “எஸ்.பி.பாலசுப்ரமண்யத்திற்கு தற்போது லேசான கொரோனா  அறிகுறிகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் செறிவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
 

click me!