தீவிர ரசிகர் தூக்கிட்டு தற்கொலை... குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறிய விஜய்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 14, 2020, 04:49 PM IST
தீவிர ரசிகர் தூக்கிட்டு தற்கொலை... குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறிய விஜய்...!

சுருக்கம்

இந்த பதிவும், பாலாவின் இழப்பும் விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள ரிஷி வந்தியத்தைச் சேர்ந்தவர் பாலா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் தீவிர ரசிகர். தளபதியின் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும், அதனை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்களில் இவரும் ஒருவர். எனவே இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில் இவர் காதல் பிரச்சனை காரணமாக, மிகவும் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறி நண்பர் ஒருவர் வெளியிட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. மேலும் குடும்பத்திலும் இவருக்கு பல பிரச்னையாம். 

தனக்கு மட்டும் அனைத்து விஷயங்களிலும் தோல்வி மட்டுமே கிடைத்ததாகவும், அதை அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு நான் வந்தாலும், ஒரு நிலைக்கு மேல் என்னால் முடியவில்லை என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறியுள்ளனர். கடந்த 11ம் தேதி “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா”  என கடைசியாக ட்வீட் செய்துள்ளார். 

 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

அதன் பின்னர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பதிவும், பாலாவின் இழப்பும் விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் #ripbala என்கிற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி இவருடைய மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நண்பரான சஞ்சீவ் மற்றும் நடிகர் சாந்தனு கூட பாலாவிற்கு மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். 

 

இதையும் படிங்க: பிகினியில் மாளவிகா மோகனன்... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த “மாஸ்டர்” நாயகி...!

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போனில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஜய், உயிரிழந்த பாலமுருகனின் தாய் மலர்விழி மற்றும் குடும்பத்தினரிடம் 15 நிமிடத்திற்கு மேல் பேசி ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி