
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை ஏற்பட்டது கோலிவுட் தரப்பு அரிந்த விவகாரமே. சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டை ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு எடுத்த வனிதா, அதை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக நடிகரும், வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வனிதா விஜயகுமார், தனது தாயார் மஞ்சுளாவின் பெயரில் இருக்கும் பங்களா, தமக்கு சொந்தமானதே என்று விதாண்டாவதாவம் செய்தார். ஆனால், செய்தியாளர்கள் அந்த பகுதியில் குவிந்ததால், ஆலப்பாக்கத்தில் உள்ள பங்களாவில் இருந்து தலைமறைவான வனிதா விஜயகுமார், மதுரவாயல் போலீசார் தம்மை அடித்து, உதைத்து வெளியேறியதாகவும், தம்மை தகாத முறையில் திட்டியதாகவும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தம் மீதான மதுரவாயல் போலீசாரின் தாக்குதலுக்கு, தமது தந்தை விஜயகுமாரும், சகோதரர் அருண் விஜய் மட்டுமே காரணம் என வனிதா புகார் அளித்ததால், கோலிவுட் தரப்பில் சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் உடன் தொடர்பில் இருந்த நடன இயக்குனர் ராபர்ட், தற்போது எந்தத் தொடர்பும் வனிதாவுடன் இல்லை என்ற மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் உடனே வசித்து வருவதாகவும், வனிதா விஜயகுமாருடன் தம்மை தொடர்புபடுத்தி பேசுவது மிகவும் வேதனையை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வேதனை தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ராபர்ட், நடிகை வனிதா விஜயகுமாருக்கும், தமக்கும் எவ்வித உடல் ரீதியான மற்றும் மனரீதியான தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.