
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் இன்றளவு வரை பெரிதாக மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்குள் வரவில்லை. தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் இறங்கினால் மக்கள் கூட்டத்தோடு சேர்த்து, 7 மாத காலமாக பட்ட நஷ்டத்தையும் சிறிது சரிகட்டலாம் என தியேட்டர் உரிமையாளர்கள் கனவு கண்டனர். அவர்கள் கனவில் மட்டும் அல்ல, ரசிகர்களின் கனவையும் சேர்த்து மண்ணை வாரி போட்டதோடு, வெறும் டீசரை மட்டுமே வெளியிட்டது.
இதையும் படிங்க: இது அனிகாவா? இல்ல பார்பி பொம்மையா?... தோழிகளுடன் வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தை முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியானதால், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: “பாண்டியர் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை...!
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, லலித் குமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் மாஸ்டர் கண்டிப்பாக தியேட்டரில் படம் காட்டுவார் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.